ஆதிசங்கரரும் தமிழகமும்

Original English Article: Adi Shankara And Tamizhagam

-D K Hari

-Hema Hari

 

ஆதிசங்கரர் நமது பாரத நாட்டில் பொது ஆண்டு முன் 5 ஆம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த அத்வைத வேதாந்த ஞானியாவார். அவர் தனது காலத்தில் பாரதிய தத்துவங்களை ஒன்றிணைத்தார், அவர் நாடு முழுவதும் நடைபயணம் செய்து பல, சொற்பொழிவுகளை நடத்தினார், மற்ற தத்துவஞானிகளுடன் விவாதங்களில் பங்கேற்றார்.

ஆதிசங்கரர் சென்னை வருகை

2500ஆண்டுகளுக்கு முன்பு ஆதிசங்கரர் சென்னைக்கு பொது ஆண்டு முன் சுமார் 500 ஆம் ஆண்டில் வருகை தந்தார். அவர் இன்றைய வட சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடைஅம்மன் கோவிலுக்கு விஜயம் செய்தார்.

adi shankar

மேலும் அவர் சென்னைக்கு மேற்கே அமைந்துள்ள மாங்காடுஅம்மன் மற்றும் சென்னைக்கு அருகில் தென்மேற்கே உள்ள காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் மற்றும் சென்னைக்கு தெற்கே திருச்சிக்கு அருகில் உள்ள திருவானைகாவல் அகிலாண்டேஸ்வரி கோவில்களுக்கும் விஜயம் செய்தார்.

devi

மாங்காடு அம்மன் கோவில்

திருவொற்றியூர், மாங்காடு காஞ்சிபுரம் மற்றும் திருவானைகாவல் கோவில்களில் எழுந்தருளியுள்ள அம்மன் உக்கிரமுர்த்தியாக காட்சி அளித்தார். ஆதி சங்கரர் , தனது தவவலிமையால் அம்மனின் உக்கிரத்தை தணித்து  சௌமிய ருபியாக்கினார்.அவர் மாங்காடு கோவிலில் அர்த்தமேரு யந்திரத்தையும் திருவொற்றியூர் கோவிலில் வட்டபாறை யந்திரத்தையும், காஞ்சி காமாட்சி  கோவிலில் ஸ்ரீ யந்திரத்தையும், திருவானைகாவல் கோவிலில் தடாகை, ரத்ன காதோலை, ஸ்தாபித்து அனுக்கிரகம் செய்து மக்கள் வளமாக வாழ வழிவகுத்தார். அவர் சக்தி பீடங்களுக்கு சென்று சக்திவழிபாட்டு முறைகளை வகுத்தார்.

பாரதம் ஒரு கலாச்சாரரிதியாக ஒன்றிய நாடு

ஆதி சங்கரர் 2500 ஆண்டுகளுக்கு முன்பு, ந்த நிலத்தை ஒரே நாடாக கருதினார். அவர் இந்த நாடு முழுவதும் பயணித்து, வழியில் பல மடங்களை ஸ்தாபித்தார்.

 அவர் பாரத நாட்டின் நான்கு திசைகளிலும் முதன்மை மடங்களை ஸ்தாபித்து தனது 4 முதன்மை சீடர்களிடம் இந்த மடங்களை ஒப்படைத்தார். அவை பின்வருமாறு,

  1. கோவர்தனபீடம் – கிழக்கு
  2. துவாரகாபீடம் – மேற்கு
  3. சிருங்கேரிசாரதா பீடம் – தெற்கு
  4. ஜோதிர்மத் பீடம் – வடக்க

shankara digvijay

ஆதிசங்கரர் தமிழகத்தில் திருவண்ணாமலை, சிதம்பரம், ஆலங்குடி திருவிடைமருதூர், திருச்சி, ஸ்ரீரங்கம், உப்பூர், ராமேஸ்வரம், திருச்செந்தூர், மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கும் விஜயம் செய்தார்.

இறுதியில் அவர் காஞ்சிபுரத்தில், மோட்சம் அடைந்தார். இவரது சமாதி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது.  ஒரு சாரருடய நம்பிக்கை அவர் சிவனுடன் கேதார்நாத்தில் ஜோதியாக கலந்தார்.

அவருடன் மீதம் இருந்த சிடர்கள் காஞ்சி காமகோட்டி மடத்தை நிறுவி அதன் மூலம் அவரது பணியை தொடர்ந்தனர். அவரது படைப்புகள் அனைத்தும் தமிழில் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆதிசங்கரர் தத்துவமும் சேவையும்  தொடர்ச்சியாக2500 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கணக்கான வேத பாடசாலைகள், தமிழ் ஆகம பாடசாலைகள், நவின ஆங்கில வழி பள்ளிகூடங்கள, ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகள் மருத்துவமனைகள் , மற்றும் நவின ஆங்கில வழி மருத்துவமனைகள், மற்றும் பொது மக்கள் நல சமுக சேவைகள்  முலம் அவரது பெயரில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.